Header Ads

Facebook பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் மறைப்பது எப்படி?


Facebook என்பது இன்று இணையத்தில் இயங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. தினமும் பதிவுகளை பகிரும் போது குறிப்பிட்ட சிலருக்காக நாம் சில பதிவுகளை பகிராமல் விடலாம். அம்மாதிரியான பதிவுகளை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தெரியாமல் மறைத்து மற்ற அனைவருக்கும் தெரியும் படி பகிர்வது  எப்படி என்று பார்ப்போம். 

முதலில் குறிப்பிட்ட பதிவை எழுதி முடியுங்கள். அதன் பின் Post பட்டனுக்கு பக்கத்திலுள்ள Drop-Down மெனுவினை கிளிக் செய்யுங்கள். வரும்  மெனு லிஸ்டில் Custom என்பதை கிளிக் செய்யுங்கள். 

இப்போது தோன்றும் Pop-up விண்டோவில் "Don't share with" என்பதில் குறிப்பிட்ட நபர்களின் பெயரை கொடுக்க வேண்டும்.


இதை முடித்து விட்டு Save Changes கொடுத்து விட்டு Post செய்து விட்டால் வேலை முடிந்தது. குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் உங்கள் Post தெரியாது.
அன்பர்களுக்கு, பதிவில் சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள Comment Box மூலம் கேட்கலாம். அது தவிர தொழிநுட்பம் சார்ந்த வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் Cyber நண்பன் - Help Desk இல் கேட்கலாம்.

2 comments:

  1. பயனுள்ள தகவல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க அன்பும் நன்றிகளும் டாக்டர். தொடர்ந்தும் இணைந்திருங்கள்... :)

      Delete

Powered by Blogger.