உங்கள் பதிவுகள் Twitter-ல் தன்னியக்கமாக Share செய்ய...
எமது பதிவுகள் வாசகர்களை சென்றடைய சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது இரண்டாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் Twitter உம் அதில் குறிப்பிடத்தக்கதாகும்.
Twitter இல் பதிவின் தலைப்பையும் அதன் இணைப்பையும் நாமே Share செய்யும் போது அதற்கு நேரம் செலவாகும். ஆனால் இந்த வேலை தன்னியக்கமாக நடந்தால் எவ்வளவு இலகுவாக இருக்கும்...?? கவலையை விடுங்கள். நீங்கள் உங்கள் தளத்தில் பதிவினை Publish செய்ததும் Twitter இலும் தானாக Update ஆகும் சேவையை கூகுளின் Feedburner வழங்குகிறது.
இனி, அந்த சேவையை எவ்வாறு செயற்படுத்துவது என பார்ப்போம்.
1. உங்களிடம் Feedburner கணக்கு இருந்தால் பயனர் பெயரும் கடவுச்சொல்லும் கொடுத்து நுழையவும். இல்லாதவர்கள் புதிய கணக்கை ஏற்படுத்திக்கொள்வது எளிதானது.
2. உங்கள் கணக்கின் Dashboard பின்வருமாறு இருக்கும். அதில் Publicize என்ற Tab ஐ கிளிக் செய்யவும்.
2. உங்கள் கணக்கின் Dashboard பின்வருமாறு இருக்கும். அதில் Publicize என்ற Tab ஐ கிளிக் செய்யவும்.
3. அதன் பின் இடதுபக்கம் உள்ள மெனுவில் Socialize என்பதை கிளிக் செய்யவும்.
4. பின்னர் வலதுபக்கம் உள்ள Add a Twitter account என்பதை கிளிக் செய்தால் டுவிட்டர் தளம் திறக்கப்படும்.
இதன் பிறகு உங்கள் டுவிட்டர் கணக்கின் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் இந்த சேவையை அனுமதிக்குமாறு ஒரு பக்கம் திறக்கப்படும். இதில் Allow என்பதை கிளிக் செய்தால் திரும்பவும் Feedburner தளத்திற்கு வரப்படுவீர்கள்.
5. இறுதியாக Post content -> Title only என்றும் Include Link என்பதில் டிக்-கும் செய்யவும். உங்கள் பதிவுகள் டுவிட்டரில் எப்படி தோன்றும் என முன்னோட்டம் காட்டப்படும். பின்னர் சேமித்துவிட்டு வெளியேறவும்.
இனிமேல் நீங்கள் வலைப்பதிவில் எழுதும் ஒவ்வொரு பதிவுகளும் Twitter-இல் தானாக Share செய்யப்படும்.
அன்பர்களுக்கு, பதிவில் சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள Comment Box மூலம் கேட்கலாம். அது தவிர தொழிநுட்பம் சார்ந்த வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் Cyber நண்பன் - Help Desk இல் கேட்கலாம்.
No comments: