நமது Blog-ஐ பத்திரமாக சேமிப்பதும் மீட்பதும் எப்படி ? Part-1
![]() |
உங்களின் Blog-ஐ பத்திரமாக பாதுகாக்க முதலில் பிளாகின் Template code ஐ சேமிக்க வேண்டும். இதற்கு,
- உங்கள் பிளாக்கர் Dashboard-ன் வலது பக்கத்தில் பட்டியிலப்பட்டிருக்கும் tabs களில் Theme என்ற tab-ஐ கிளிக் செய்யுங்கள்.
- வரும் பக்கத்தில் வலது மேல் மூலையில் காணப்படும் Backup/Restore என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.
- அடுத்து தோன்றும் pop-up விண்டோவில் Download theme என்பதை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இதில் உங்கள் பிளாக்கின் template, அதில் உள்ள விட்ஜெட்கள் என்பன அடங்கும்.
அடுத்தது நமது பிளாக்கில் உள்ள கட்டுரைகளை சேமிக்க வேண்டும்.
- உங்கள் பிளாக்கர் Dashboard-ன் வலது பக்கத்தில் பட்டியிலப்பட்டிருக்கும் tabs களில் Settings என்ற tab-ஐ கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் அந்த tab-இற்கு கீழே தோன்றும் sub tabs-ல் other என்ற tab-ஐ கிளிக் செய்யுங்கள்.
- வரும் பக்கத்தில் முதலாவதாக காணப்படும் Import & Backup எனும் பகுதியில் உள்ள Backup Content பட்டனை கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். இதில் உங்கள் பிளாக்கின் page, posts & comments என்பன அடங்கியிருக்கும்.
No comments: