Header Ads

Facebook இல் வீடியோக்கள் தானாக Play ஆவதை தடுப்பது எப்படி?


Facebook தளத்தில் அண்மையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் சில மாற்றங்கள் நமக்கு தேவையற்றவையாகவும் இருக்கலாம். அப்படியான மாற்றங்களில் ஒன்று தான், உங்களது Facebook கணக்கின் முகப்புப் பக்கத்தில்(News Feed) இல் பகிரப்படும் வீடியோ கோப்புக்கள் தானாக இயங்குவது.


இந்த மாற்றத்தினால் தேவையற்ற வீடியோ கோப்புக்களும் தானாக இயங்குவதனால் எமது தரவுப்பாவனை அதிகரிக்கப்பதோடு சிலருக்கு தொல்லையாக கூட இருக்கலாம்.

எனவே இந்த வசதி உங்களுக்கு தேவையற்றது என நீங்கள் கருதினால் இதனை முடக்கிக் கொள்ளும் வசதியையும் Facebook தருகிறது.

இவ்வாறு தானாக இயங்கும் வீடியோ கோப்புக்களின் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.

❶ முதலில் உங்கள் Facebook கணக்கிற்குள் நுழையுங்கள்.

❷ பின் Settings பகுதிக்கு செல்லுங்கள் (Settings பகுதியை தேடிக்கொள்ள இயலாவிட்டால் இந்த இணைப்பை சுட்டுங்கள். https://www.facebook.com/settings 

❸ பின் அங்கு இடப்பக்கமாக காணப்படும் Tabs-களில் Videos என்ற tab-ஐ தெரிவு செய்யுங்கள். இப்போது அங்கு காணப்படும் Auto-Play Videos என்பதற்கு நேரே இருக்கும் Drop Down Menu இல் Off என்பதனை தெரிவு செய்து விடுங்கள்.

அவ்வளவு தான்... இனி வீடியோ கோப்புக்களை நீங்கள் Play பண்ணினால் மாத்திரமே இயங்கும்.

அன்பர்களுக்கு, பதிவில் சந்தேகங்கள் இருந்தால் கீழுள்ள Comment Box மூலம் கேட்கலாம். அது தவிர தொழிநுட்பம் சார்ந்த வேறு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் Cyber நண்பன் - Help Desk இல் கேட்கலாம்.

No comments:

Powered by Blogger.